search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கும்பகோணம் பஸ் நிலையம்"

    கும்பகோணம் பஸ் நிலையம் பின்புறம் வாலிபர் மர்மமான முறையில் இறந்து கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுதொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கும்பகோணம்:

    கோவில் நகரம் என்றழைக்கப்படும் கும்பகோணத்துக்கு வெளியூர் பயணிகள் அதிக அளவில் வந்து செல்வது வழக்கம். இதையொட்டி கும்பகோணம் பகுதியில் குற்றச்செயல்களும் அதிக அளவில் நடந்து வருகின்றன. சிலர் போலீசாருக்கு டிமிக்கி கொடுத்து விட்டு சமூக விரோத செல்களிலும் ஈடுபட்டு வருகின்றனர். 

    கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு ரவுடி வெட்டிக்கொலை செய்யப்பட்டான். இந்த பரபரப்பு அடங்கும் முன்பு கும்பகோணம் பஸ்நிலையம் பின்புறம் வாலிபர் மர்மமாக இறந்து கிடந்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுபற்றிய விவரம் வருமாறு:- 

    கும்பகோணம் பஸ் நிலையத்தின் பின்புறம் உள்ள ஜான் செல்வராஜ் நகரில் ஒரு ஆண்பிணம் கிடப்பது நேற்று மாலை தெரியவந்தது. அந்த நபர் ஜட்டி மட்டும் அணிந்து இருந்தார். 35 வயது மதிக்கத் தக்க அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? எப்படி இறந்தார்? என்பது மர்மமாக உள்ளது. அவர் உடலில் காயம் இல்லை.

    வாலிபர் ஒருவர் பிணமாக கிடப்பதை கண்ட பொதுமக்கள் கும்பகோணம் மேற்கு போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று ஆண்பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பஸ் நிலையத்துக்கு வந்த வாலிபரை மர்ம நபர்கள் கொலை செய்து அவரது உடமைகளை எடுத்து சென்று விட்டார்களா? என்பது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பஸ் நிலையம் பின்புறம் வாலிபர் மர்மமான முறையில் இறந்து கிடந்த சம்பவம் கும்பகோணத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுதொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×